SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு மட்டன் குருமா

2019-08-08@ 16:27:26

என்னென்ன தேவை?

வேக வைத்த மட்டன் – 1/2கிலோ, சின்ன வெங்காயம் - 20, அரைத்த பச்சை மிளகாய் - 6, தக்காளி - 2, தேங்காய் – 1/2 மூடி, கறிவேப்பிலை, மல்லி, புதினா - சிறிதளவு. முந்திரி தூள் – 50 கிராம், சோம்பு – 1/2ஸ்பூன், பட்டை , ஏலக்காய் - 3, கிராம்பு - 3, அன்னாசிப்பூ - 3, கல்பாசி - , மல்லித்தூள் – 1/2ஸ்பூன், சீரகத்தூள் - , சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன் , க.எண்ணெய் – 100மிலி,  இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  தேங்காய், முந்திரிகள் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.


எப்படிச் செய்வது?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் கழித்து இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து பின்பு தக்காளி சேர்த்துக்கொள்ளவும். பிறகு மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு  அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்