SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் பரோட்டா

2019-08-01@ 16:55:50

தேவையான பொருட்கள்:
 
எலும்பு இல்லத சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம், மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக)
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மைதா - ஒரு கப்


செய்முறை:
 
முதலில் ஒரு பவுலில் ஒரு கப் மைதாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர்  ஒரு துணியால் மூடி அரை மணிநேரம் ஊறவிடவேண்டும். சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும். அதாவது ஒரு வானலியில் சிக்கனை போட்டு அவற்றில் சிறிதளவு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சிக்கன் வெந்ததும் மிக்ஸியில் சேர்த்து  அரைத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு, வெங்காயம் நன்கு வதக்கி, மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி  பூண்டு விழுது, டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்பு அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து  வதக்கவும்.
 
பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மைதா மாவை தேய்த்து அதனுள் சிக்கன் கீமாவை வைத்து மடிக்கவேண்டும். பின்னர் திரும்பவும் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். இதனை தோசை  கல்லில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் பரோட்டா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்