SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிவி’ கப் கேக்

2019-08-01@ 16:46:37

தேவையான பொருட்கள்

முட்டை - 2
மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
பட்டைத் தூள் - ¼ டீஸ்பூன்
வெண்ணெய் - 150 கிராம் (உப்பு இல்லாதது)
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 கப் (பொடித்தது)
கிவி பழம் - 2

(ஒரு பழத்தை மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும். மற்றொன்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டிலும் 1 டேபிள்
ஸ்பூன் அளவில் அலங்கரிக்க தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்)

மேலே அலங்கரிக்க தேவையான பொருட்கள்
விப்பிங் கிரீம் - 1 கப்,
கிவி அரைத்த விழுது - 1 டேபிள்ஸ்பூன்
விப்பிங் கிரீம் செய்ய தேவையான பொருட்கள்
க்ரீம் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் - 1 டீஸ்பூன்.


விப்பிங் க்ரீம் செய்முறை

ஒரு பாத்திரத்தில் கிரீமை ஊற்றி, எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நீர்க்க இல்லாமல், கெட்டியாக நுரைக்க அடிக்கவும் (Non-Dropping consistency) பிறகு, சர்க்கரையையும், வெனிலா எஸன்ஸையும் சேர்த்து கிளறவும்.

கேக் செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் ஆகியவற்றை எலக்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் முட்டை, அரைத்து வைத்துள்ள கிவி விழுது ஆகியவற்றை பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். பின்பு, இக்கலவையில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பட்டைத்தூள் சேர்த்து சிறிது சிறிதாக கலந்து Hand Beater கொண்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

பிறகு, இதை கப் கேக் மோல்டில் பேப்பர் கப் வைத்து ¾ பாகத்திற்கு மாவை ஊற்றி 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 20-22 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியசில் பேக் செய்யவும். ஆறியதும், விப்பிங் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.மேலே அலங்கரிக்கக்ரீமில் அரைத்துள்ள கிவி விழுதையும், பொடியாக நறுக்கியதையும் கலந்து பைப்பிங் கோன் கொண்டு அலங்கரித்து, பரிமாறவும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்