SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜிடபிள் பணியாரம்

2019-07-29@ 16:42:25

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 3 கப்,
நறுக்கிய முட்டைகோஸ், கேரட் துருவல் - தலா 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், வெங்காயம் - தலா 1/4 கப்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி காய்கறி கலவை, தேங்காய்த்துருவல்  சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும். இக்கலவையை இட்லி மாவில் கொட்டி நன்றாக கலந்து  கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து தேங்காய் சட்னியுடன்  பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்