SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் பிரியாணி

2019-07-23@ 16:51:10


தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி பவுடர் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3 (அரைத்து வைக்கவும்),
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - 4 டீஸ்பூன்.
     
இவை அனைத்தையும் இறாலுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

சோம்பு - 1,
பட்டை - 3,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 15,
கிராம்பு - 4,
நட்சத்திர சோம்பு - 1,
ஏலக்காய் - 3.

இவை அனைத்தையும்  ஒரு சுத்தமான மெலிசான துணியில கட்டி வைத்துக்கொள்ளவும்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா பையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் பிரியாணி இலை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும். பின் 10 நிமிடம் வேக வைக்கவும். அரிசி வெந்தவுடன் மசாலா பையை எடுத்து விடவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை சமமாகப் போடவும். அதன்மேல் வேக வைத்த அரிசி, மற்றும் Fried onion, கொத்தமல்லி, புதினா சேர்த்து அதன்மேல் மீதியுள்ள அரிசியை சேர்த்து  பாலில் கலந்து வைத்த குங்குமப் பூவையும் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால் இறால் பிரியாணி தயார். இதனுடன் தயிர் மற்றும் இறால் சில்லி சேர்த்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்