SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரண்டை சாதம்

2019-07-23@ 16:24:20

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்.

பொடிக்கு...

பொடியாக நறுக்கிய பிரண்டை - 1/2 கப்,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,  
காய்ந்தமிளகாய் - 3,
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுத் தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

நெய்யில் வறுத்த குண்டுமிளகாய் - 3,
கறிவேப்பிலை - 5 இலைகள்.


எப்படிச் செய்வது?

கடாயில் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெயில் முறுவலாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் அனைத்து பொருட்களையும் கலந்து பொடிக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, சாதம், பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து, கறிவேப்பிலையை தூவி, அதன்மேல் குண்டுமிளகாய் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2019

    23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்