SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு நண்டு வறுவல்

2019-07-18@ 17:40:55

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த நண்டு – 8.
இடித்த சின்ன வெங்காயம் – 1.
பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – 1 கொத்து.
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த்துருவல் – 1/4 கப்.
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்.
கசகசா – 1 டீஸ்பூன்.
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 7.


எப்படிச் செய்வது?

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது…  என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்