SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் பால் சிக்கன் கிரேவி

2019-07-18@ 17:36:11

என்னென்ன தேவை?

சிக்கன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
மிளகுத்தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள்  2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தயிர் – 3 ஸ்பூன்
தேங்காய் பால் – ஒரு கப்
கறிவேப்பிலை, மல்லி – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

சிக்கனை பொடியாக நறுக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி சிறிது நேரம் வேக விடவும். வெந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து கிளறவும். இதில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு மிளகுத்தூள், சீரகத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேகவிடவும். 10 நிமிடம் கழித்து, சிக்கன் வெந்ததும் தேங்காய் பாலை சேர்க்கவும். சிக்கன் கிரேவியாக வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான்.. தேங்காய் பால் சிக்கன் கிரேவி ரெடி. சாதத்திற்கு மட்டுமல்ல… டிபன் அயிட்டங்களுக்கும் தொட்டு உண்ணலாம். செம டேஸ்டாக இருக்கும்…!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்