SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் வறுவல்

2019-07-15@ 16:37:18

தேவையான பொருட்கள்  

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
எலுமிச்சை பழம் - 1,
மிளகு - 2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி,
மீன் - 1/2 கிலோ,
மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்,
மல்லித்தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 1½ மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை - 2 கொத்து,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் மீனை எடுத்து சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை பழம் சாறும் பிழிந்து விழுதுபோல செய்துகொண்டு அதில் மீனை நன்கு ஊற வைத்துக்கொள்ளவும் குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து ஆற வைத்து பொடி செய்துகொள்ளவும்.

பின் ஊற வைத்துள்ள மீனை அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். பின் அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து மொறு மொறு மீன் வறுவல் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்