SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் பிரியாணி

2019-07-15@ 16:30:29


தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
பிரியாணி மசாலா - 1½ டீஸ்பூன்,
கொத்தமல்லி,
புதினா - 1 கப்,
வெங்காயம் - 3 (பெரியது),
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தக்காளி - 3,
பட்டை - 2 கிராம்,
புதினா - 2,
சோம்பு - சிறிதளவு,
பிரியாணி இலை - 2,
கரம் மசாலா -  1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்,
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 கப், எண்ணெய் -  1/4 கப்.


செய்முறை

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து பின்பு பட்டை பொடி, கிராம்பு பொடி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி அதில் சிக்கனை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின் தயிர், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலாவை வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன் அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வைக்கவும். இப்பொழுது கமகமக்கும் சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் சிக்கன் குருமா மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக வதங்கியவுடன் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்