SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜ் தம் பிரியாணி

2019-07-09@ 17:19:11

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் - 1/2 கப்,
பீன்ஸ் - 1/2 கப்,
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
கேரட் - 2 (சிறியது),
பச்சை பட்டாணி - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 4 (அரைத்துக் கொள்ளவும்),
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்,
பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1,
பிரியாணி இலை - 2,
குருமிளகு - 10,
Fried onion - 1/2 கப்,
தயிர் - 1/2 கப்,
கொத்தமல்லி - 1/2 கப்.


செய்முறை

ஒரு கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் சேர்த்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி அனைத்தையும் தனித்தனியாக வதக்கி வைக்கவும். பின் அனைத்தையும் சேர்த்து பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, குருமிளகு சேர்த்து அதன்பின்  Fried onion  சேர்த்து தயிர் ஊற்றி வேக விடவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்) பின் ஒரு பாத்திரத்தில் தயார் செய்த மசாலாவை சேர்த்து கொத்தமல்லி தூவி வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் புதினா, கொத்தமல்லி, Fried onion, குங்குமப் பூ சாறு ஊற்றி, லெமன் மற்றும் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீரை அதன்மேல் தெளித்து 10 நிமிடம் மிதமான சூட்டில் தம் போட்டு இறக்கினால் கமகமக்கும் சுவையான வெஜ் தம் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: Fried onion செய்யும் முறையை முன்பக்கத்தில் பார்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்