SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைனாப்பிள் கப் கேக்

2019-06-25@ 17:28:06

தேவையான பொருட்கள்
 
பேப்பர் கப்: தேவைக்கேற்ப,
கோதுமை மாவு: 125 கிராம்,
சர்க்கரை:100 கிராம் (பொடித்தது),
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
உப்பு: 1 சிட்டிகை,
முட்டை: 1 (பெரியது),
அன்னாசி பழம்: 100 கிராம் (அரைத்தது) 50 கிராம் (பொடியாக நறுக்கியது),
வெண்ணெய்: 50 கிராம் (உருக்கியது),
பால்: 100 மில்லி.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு கலக்கவும்.பின் பால், உருக்கிய வெண்ணெய் மற்றும் அரைத்த அன்னாசி பழம் ஆகியவற்றை கொண்டு கலக்கவும். பின் அதில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை அரை கப் அளவு ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய அன்னாசி பழத்தை தூவி பிறகு அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்