SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லேயர் பிரியாணி

2019-06-25@ 17:24:12

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப்,
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி - 1/2 கப்,
குங்குமப்பூ - (தண்ணீரில் (அ) பாலில் கலந்து வைத்துக்கொள்ளவும்),
Fried onion - 1/2 கப்,
கொத்தமல்லி, புதினா - 1/4 கப்,
நெய், எண்ணெய் -  1/2 கப்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2, மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா, மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தேவைக்கேற்ப.


செய்முறை

பாஸ்மதி அரிசியை முதலில் வேக வைத்து ஆற வைத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை - 1, கிராம்பு - 1, ஏலக்காய் - 1, பிரியாணி இலை - 2 போட்டு பிறகு வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்த அரிசியை அதன்மேல் போட்டு சமமாகச் செய்யவும்.

அதன்மேல் சிறிதளவு நெய் மற்றும் குங்குமப்பூ சாறு,  Fried onion, கொத்தமல்லி, புதினா சேர்த்து அலுமினியம் பாயில் கொண்டு  கலர் செய்யவும். அதன்மேல் மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கி ஆறியவுடன் பரிமாறவும். கமகமக்கும் லேயர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் காளான் ஃப்ரை (வறுவல்) சேர்த்து சாப்பிடலாம். (தம் பிரியாணி செய்ய அரிசியை வேக வைக்கும் முறை)

குறிப்பு: பாஸ்மதி அரிசியை வேக வைப்பதற்கு 5 கப் தண்ணீர், 1 கப் அரிசி தண்ணீர் நன்றாக கொதி வந்தபின் பட்டை - 1, கிராம்பு - 1, பிரியாணி இலை - 1, நட்சத்திரப்பூ - 1 சேர்த்து கொதி வந்தபிறகு அரிசியை போட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்