SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரமல் கஸ்டர்ட்

2019-06-19@ 15:04:39

தேவையானவை

பால் - 125 மில்லி
முட்டை - 1
சர்க்கரை - 60 கிராம்
ஜாதிக்காய் - தேவையான அளவு
வெண்ணிலா சாரம் - 5 மில்லி


செய்முறை

முதலில் பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் 40 கிராம் சர்க்கரையை சேர்த்து கிளறவும். பின்னர் ஆற விடவும். இத்துடன் முட்டை, ஜாதிக்காய், வெண்ணிலா சாரம் மூன்றையும் நன்கு கலக்கி ஆறிய பாலுடன் சேர்க்க வேண்டும். மீதமுள்ள 20 கிராம் சர்க்கரையை வாணலியில் போட்டு மிதமான சூட்டில் உருக்க வேண்டும். அது உருகும்போது ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவேண்டும். அதன் நிறம் காபி கலராக மாறும். அதனை பாத்திரத்தில் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து ஆறிய பால் கலவையை அதன் மேல் ஊற்றி, பிளாஸ்டிக் பேப்பரால் மூடவும். பின்னர் இட்லி பானையில் இதனை போட்டு 20 - 25 நிமிடம் வேக விடவும். வெந்ததும் வெளியே எடுத்து பிளாஸ்டிக் பேப்பரை அகற்றவும். சூடு ஆறிய பிறகு பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். அப்புறம் எடுத்து சாப்பிட்டு பாருங்க... சுவையான கேரமல் கஸ்டர்ட் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்