SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் பிரியாணி

2019-06-12@ 17:51:57

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் - 1/2 கப், முந்திரி - 10, சோம்பு - 1/2 டீஸ்பூன், பிரியாணி இலை - 2, பட்டை - 1, மராட்டி முக்கு - 1, கல்பாசி - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - 2, இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், தக்காளி - 2, பச்சை பட்டாணி - 1/2 கப், பீட்ரூட் - 2 (துருவி வைத்துக்கொள்ளவும்), மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புதினா - 1/4 கப், தயிர் - 1 கப், பிரியாணி மசாலா - 1½ டீஸ்பூன், பிரியாணி அரிசி - 2 கப்.


செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, மராட்டி முக்கு, கல்பாசி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பச்சை பட்டாணி, பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு நன்றாக வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, புதினா, தயிர், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும். பின் மிதமான சூட்டில் 1 விசில் வரும் வரை வைத்து இறக்கினால் கமகமக்கும் சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்