SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரமல் கேக்

2019-06-12@ 17:41:36

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 175 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
ஜாம் - 30 கிராம்,
பால் - 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 120 கிராம்,
முட்டை - 2.

காரமல் செய்வதற்குத் தேவையானவை

தண்ணீர் 50 மி.லி,
சர்க்கரை - 50 கிராம்.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் போட்டு அடுப்பில் சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது தண்ணீரை விட்டு 5  நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

கேக் செய்முறை

முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக பீட்  செய்துகொள்ளவும். சர்க்கரையும், வெண்ணெயும் லேசாக ஆகும் வரை நன்றாக பீட் செய்துகொள்ளவும். இத்துடன் மஞ்சள் கருவை சேர்த்து  பீட் செய்துகொள்ளவும். காரமல் சேர்த்து பிறகு சலித்த மாவை சேர்க்கவும். அதனுடன் அடித்த முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு  மெதுவாக  கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 இஞ்ச் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி மாவு தூவி அதில் க.மாவு  கலவையை போடவும். பிறகு 300C- 40 நிமிடம் பேக் செய்யவும். பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். கேக்கின் மேல் 30 கிராம் ஜாம்  தடவி மற்றொரு கேக்கை அதன்மேல் வைத்து பரிமாறலாம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்