SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நண்டு குழம்பு

2019-05-29@ 15:57:28

தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,
தேங்காய் விழுது - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 6,
கறிவேப்பிலை - 1 கொத்து,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
மிளகாய்த்தூள் - 10 கிராம்,
மிளகுத்தூள் - 5 கிராம்,
சீரகத்தூள் - 5 கிராம்,
புளி தண்ணீர் - 50 மிலி,
எண்ணெய் - 150 மிலி,
 உப்பு - தேவைக்கு.


செய்முறை

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய் விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் நண்டு, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். நண்டு வெந்தவுடன் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து அலங்கரித்து இறக்கவும்.

Tags:

Crab curry

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்