SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலிஃப்ளவர் பிரியாணி

2019-05-27@ 17:46:34

தேவையான பொருட்கள்

நெய், எண்ணெய் -  1/2 கப்,
பிரியாணி இலை - 1,
பட்டை - 3,
ஸ்டார் பூ - 1,
ஏலக்காய் - 2,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 5,
தக்காளி - 2,
இஞ்சி, பூண்டு, பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
புதினா - 1 கப்,
கொத்தமல்லி - 1/2 கப்,
காலிஃப்ளவர் - 1 (பெரியது),
தயிர் - 1/2 கப்,
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்ப்பால் - 2½ கப்,
அரிசி (பாஸ்மதி - 2 கப்.


செய்முறை

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, ஸ்டார் பூ, ஏலக்காய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பின் புதினா, கொத்தமல்லி, காலிஃப்ளவர், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சில்லி பவுடர், கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப்பால் (தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கவும்) சேர்த்து அதனுடன் அரிசியை சேர்க்கவும். மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் காலிஃப்ளவர் சில்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பிரியாணி செய்ய காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி வெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்து கழுவிய பின் உபயோகிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்