SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் பிரியாணி

2019-05-22@ 15:25:27

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்,
பனீர் - 400 கிராம்,
பட்டை - 1,
பிரியாணி இலை - 2,
கருப்பு ஏலக்காய் - 2,
வெங்காயம் - 2,
தக்காளி - 2 (அரைத்துக்கொள்ளவும்),
கொத்தமல்லி, புதினா -  1/2 கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 1/4 டீஸ்பூன்,
பிரியாணி மசாலா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, எண்ணெய்,
நெய் - 1/2 கப்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சீரகம், வெங்காயம் சேர்த்து வைக்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள், மிளகாய்த்தூள், சீரகப் பவுடர், கொத்தமல்லி பவுடர், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியபின் பிரியாணி மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கியவுடன் அதில் பனீரை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து பின் அதில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, Fried onion, நெய் சேர்த்து வேக வைத்த அரிசியை சேர்த்து தம் போட்டு மூடி வைக்கவும். (5 நிமிடம்) பின் அதில் கொத்தமல்லி, புதினா, நெய், குங்குமப்பூ தூவி Fried onion சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வைத்து இறக்கினால் கமகமக்கும் சுவையான பனீர் பிரியாணி தயார். இதனுடன் பனீர் ஃப்ரை மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: தயிர் பச்சடி செய்யும் முறை மற்றும் பாஸ்மதி அரிசியை தம் போட வேக வைக்கும் முறையை முன்பக்கம் காண்க.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்