SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொச்சைக் கொட்டை பிரியாணி

2019-05-20@ 16:52:58

தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 1 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
மொச்சைக் கொட்டை - 1/2 கப்,
தக்காளி - 3,
வெங்காயம் - 2,
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - 1/2 கப்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் -  1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2, நெய்,
எண்ணெய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சம் பழம் - 1 டீஸ்பூன்.


செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து பின் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் பிரியாணி மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும். அதன்பின் மொச்சைக் கொட்டை, நெய் விட்டு 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் மொச்சைக் கொட்டை பிரியாணி தயார். இறக்கியவுடன் எலுமிச்சம்பழம் சேர்க்கவும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

குறிப்பு: அரிசி மற்றும் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு பயன்படுத்தவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்