SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் ஒயிட் பிரியாணி

2019-05-16@ 16:47:16

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
(பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
மல்லி - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தயிர் - 1/2 கப், எலுமிச்சம்பழம் - 1,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய், நெய் - 1/2 கப்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும். பின் சிக்கனை இதில் சேர்த்து அரிசியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா சேர்த்து தம் போட வேண்டும். இப்பொழுது சுவையான கமகமக்கும் சிக்கன் ஒயிட் பிரியாணி தயார். இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்