SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொத்தமல்லி பிரியாணி

2019-05-15@ 16:44:20

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் - 1/2 கப்,
(கொத்தமல்லி - 1 கப்,
புதினா - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 3,
சின்ன வெங்காயம் - 10 அரைத்து வைத்துக்கொள்ளவும்),
பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
முந்திரி - 10,
பச்சை பட்டாணி - 1/2 கப்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தயிர் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சம்பழம் - 1,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,  
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்,  
பட்டை - 1,
கிராம்பு - 2,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
ஏலக்காய் - 2,
மராட்டி முக்கு - 1,
நட்சத்திர சோம்பு - 1,
உப்பு - தேவைக்கு (கல் உப்பை பயன்படுத்தினால் சுவை கூடும்.).


செய்முறை

குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், மராட்டி முக்கு, நட்சத்திர சோம்பு சேர்த்து பின் முந்திரி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியவுடன், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு, பிரியாணி மசாலா, எலுமிச்சம்பழம் சேர்த்து கொதி வந்தவுடன் அரிசி, கொத்தமல்லி சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் கொத்தமல்லி பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்