SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்திரி புலாவ்

2019-05-13@ 17:12:54

என்னென்ன தேவை :

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ
கத்திரிக்காய் - 4
உருளை - 2
பல்லாரி - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
தனியா - ஒரு ஸ்பூன்
வேர்க்கடலை - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - அரை கட்டு
பச்சை பட்டாணி - 1/4 கப்
மிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
பட்டை, பிரிஞ்சி இலை, முந்திரி, உப்பு - தேவையான அளவு
தாளிக்க - நல்லெண்ணெய் 3 ஸ்பூன்


எப்படிச் செய்வது :

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், தனியா, வேர்க்கடலையை தனித்தனியாக வறுக்கவும். ஆறியதும் மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரிசியை முக்கால் பாகமாக உப்பு சேர்த்து வேக வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும். வெங்காயம், உருளை, கத்தரிக்காயை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்த வாசனை பொருட்களை சேர்த்து தாளிக்கவும். காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து 4 ஸ்பூன் சேர்த்து கிளறவும். இப்போது தீயை நன்கு குறைத்து வைக்கவும். பொடி காய்கறிகளில் நன்கு பரவியதும் வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். கமகம சுவையில் கத்திரி புலாவ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்