SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை பன்னீர் மசாலா

2019-05-06@ 17:54:19

தேவையான பொருட்கள்

பன்னீர் - 100 கிராம்,
கரம் மசாலா - 7 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்,
தேங்காய் விழுது - 20 கிராம்,
முந்திரி விழுது - 20 கிராம்,
கசகசா விழுது - 10 கிராம்,
நல்லெண்ணெய் - 20 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 10 மிலி,
ரீபைண்ட் ஆயில் - 20 மிலி,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பச்சை மிளகாய் - 2, உருளை,
கேரட், பீன்ஸ் (வேகவைத்தது) - 1/2 கப்.


செய்முறை

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். தேங்காய், முந்திரி, கசகசா விழுதினை காய்கறிகளுடன் சேர்க்கவும். இதில் பச்சை மிளகாயை கீறி சேர்க்கலாம் அல்லது தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கலாம். விழுதுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து  பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்