SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹஷ் பிரவுன்ஸ் (Hash browns)

2019-05-06@ 17:44:56

தேவையானவை:

உருளைக்கிழங்கு - அரை கிலோ
வெண்ணெய்  - 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு,
மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள், மிளகுத்தூள் -
தலா அரை டீஸ்பூன்
மிக பொடியாக நறுக்கிய பூண்டு -
அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

உருளைக்கிழங்கைச் சுத்தம்செய்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாகத் துருவிக்கொள்ளவும். இதை இரண்டு, மூன்று முறை அலசவும். வாய் அகன்ற பாத்திரத்தில் ஐஸ் தண்ணீர் விட்டு, துருவிய உருளைக்கிழங்கைப் போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் பிழிந்து எடுத்து ஒரு சுத்தமான மெல்லிய துணியில் போட்டு மூட்டையாகச் சுற்றி மீண்டும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழியவும்.  இந்தத் துருவலை ஒரு காய்ந்த துணியின் மேல் போட்டு மீண்டும் சிறிது நேரம் வைக்கவும், இது உதிர் உதிராக இருக்கும். ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை நான் ஸ்டிக் பானில் (pan) சேர்த்து, உருகியதும் உருளைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து குழையாமல் உதிர் உதிராக சிறிது நேரம் வதக்கவும். பிறகு, ஆறவிட்டு, இதனுடன் மீதி வெண்ணெயைத் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு வெண்ணெய் காகிதத்தில் (butter paper) அரை இன்ச் கனத்தில் சதுரமாக அல்லது வட்டமாக  (அடை மாதிரி) தட்டி மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும் (கையில் வெண்ணெய் தடவிக்கொண்டு தட்டலாம்). அரை மணி நேரத்துக்குப் பிறகு  ஃப்ரிட்ஜில்  எடுத்து விருப்பமான வடிவில்  துண்டுகள் போடவும். மீதி இருக்கும்  வெண்ணெயை நான் ஸ்டிக் பானில்விட்டு, வெட்டிய துண்டுகளை மெதுவாக எடுத்து வைத்து, இரண்டு பக்கமும் வறுத்தெடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்