SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் பிரியாணி

2019-04-17@ 16:17:29

தேவையான பொருட்கள்

குருமிளகு - 1/2 டீஸ்பூன்,
கிராம்பு - 3,
ஏலக்காய் - 3,
நட்சத்திர பூ - 1,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பட்டை -1.

இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

தயிர் - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மீன் - 1/2 கிலோ (முள் இல்லாதது),
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
எண்ணெய்  1/2 கப்,
நெய் - 1/4 கப், 
Fried onion - 1 கப், கொத்தமல்லி, புதினா - 1 கப்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு அரைத்து பொடி செய்த மசாலாவை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். 30 முதல் 40 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி ஊற வைத்த மீன் துண்டுகளை 3 நிமிடம் வேக விடவும். பின் திருப்பி போட்டு கொத்தமல்லி, புதினா, Fried onion சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை  சேர்த்து அதன்மேல் Fried onion.  கொத்தமல்லி, புதினா தூவி மீதியான அரிசியை அதன்மேல் சேர்த்து Fried onion. புதினா, கொத்தமல்லி, நெய் மற்றும் குங்குமப்பூ சாறு சேர்த்து 15-20 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது கமகமக்கும் சுவையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் மீன் வறுவல் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: மீன் பிரியாணி செய்யும்போது அரிசியை வேக வைக்கும் முன், கடாயில் சிறிதளவு எண்ணெய், பட்டை - 1, பிரியாணி இலை - 1, ஏலக்காய் - 1, நட்சத்திர சோம்பு -1, கருப்பு சீரகம் - 1 டீஸ்பூன் சேர்த்து கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்