SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை புளியோதரை

2019-04-16@ 14:06:19

என்னென்ன தேவை :

வடித்த சாதம் - 1 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறுப்பு கொண்டைக்கடலை - 1/4 கப்.

வறுத்து பொடிக்க...

தனியா - 2 டீஸ்பூன்,
கறுப்பு எள் - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்கடலை - ஒரு கைப்பிடியளவு.


எப்படிச் செய்வது :

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிய விடவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் பொடிக்கவும். அதே கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை நன்கு கெட்டியாக வரும்போது, அரைத்த பொடி தூவி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். புளிக்காய்ச்சல் ரெடி. வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சல், வெந்த கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்