SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலக்கீரை சாதம்

2019-04-15@ 17:41:33

என்னென்ன தேவை :  

அரிசி - 2 கப்
பாலக்கீரை    - 1/4 கிலோ
தேங்காய் - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய்    - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


எப்படிச் செய்வது :

முதலில் அரிசியை நன்கு சுத்தம் செய்து ஒரு கப் நீரில் ஊற வைக்கவும். பின்பு பாலக்கீரையை 10 நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் சிறிதளவு நீர் சேர்த்து, பாலக்கீரையை நைசாக அரைக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு தண்ணீருடன் ஊற வைத்த அரிசியை போட்டு, பாலக்கீரை விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். உடலுக்கு சத்தான பாலக்கீரை சாதம் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்