SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீர்க்கங்காய் அடை

2019-04-08@ 15:19:36

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் - 1
புழுங்கலரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
கொள்ளு - ஒரு கைப்பிடி
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 சிட்டிகை

தாளிக்க:    

கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்


செய்முறை

புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் பெருஞ்சீரகம், சீரகம், தனியா, பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து, பொடி ரவை பதத்திற்கு அரைக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும். பின் பீர்க்கங்காய், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். வதக்கியதை, அப்படியே அரைத்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல் சூடேறியதும் மாவை அடை போல ஊற்றி, பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். பீர்க்கங்காய் அடை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்