SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதினா சப்பாத்தி

2019-03-19@ 16:00:07

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்
புதினா கீரை - 2 கப்
கொத்தமல்லி - அரை கப்
பல்லாரி : 1
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். புதினாவையும், கொத்துமல்லியையும் நன்றாக அலசி பொடியாக வெட்டிக்கொள்ளவும். பல்லாரி, பூண்டு, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு சீரகம் போட்டு பொரித்து, பின்னர் பல்லாரி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லியை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் ஊறவைத்த மாவை தேவையான சப்பாத்தி அளவில் உருட்டிக் கொள்ளவும். ஒரு சப்பாத்தி மீது வதக்கி வைத்துள்ள புதினா கலவையை தேவையான அளவு இட்டு அதன் மீது மற்றொரு சப்பாத்தி வைத்து முனைகளில் ஒட்டவும். மீண்டும் இதனை லேசாக உருட்டிக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்தியை போட்டு எடுக்கவும். சத்தான, சுவையான புதினா சப்பாத்தி ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்