SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மட்டன் சுக்கா

2019-03-19@ 15:58:43

என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கப்
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் பால் - 2 ஸ்பூன்

தாளிப்பதற்கு:

பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிதளவு


எப்படிச் செய்வது?

அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளை போட்டு, மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும். அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, வேக வைத்த மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறவும். மட்டனில் தண்ணீர் வற்றியதும், தேங்காய் பால் சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கவும். செம டேஸ்டான மதுரை மட்டன் சுக்கா ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்