SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு உளுத்தம் பருப்பு வடை

2019-03-11@ 12:29:37

என்னென்ன தேவை?

தோலுடன் இருக்கும் கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
சீரகம் - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவைக்கு பொடித்தது,
மிளகு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கருப்பு உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து சிறிது தண்ணீர் தெளித்து பின் நன்கு அரைக்கவும். வடித்து இத்துடன் உடைத்த மிளகு, சீரகம், உப்பு, பெருங்காயம், பொடித்த கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: வடை கரகரப்பாக வேண்டும் என்றால் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மென்மையாக வேண்டும் என்றால் மையாக அரைத்து எடுத்து வடை செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்