SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சடி சாதம்

2019-03-04@ 14:16:59

தேவையான பொருட்கள்:

அரிசி -  2 கப்
தேங்காய், பயத்தம்பருப்பு  -  1/2 கப்
கசகசா  -  1 ஸ்பூன்
தயிர்  -  1/4 கப்
பச்சை மிளகாய்  -  3
தக்காளி  -  3
இஞ்சி, பூண்டு விழுது  -  2 ஸ்பூன்
பல்லாரி  -  1
பெருஞ்சீரம்  -  1 ஸ்பூன்
மஞ்சள்தூள்  -  1 ஸ்பூன்
தனியாத்தூள்  -  1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்  -  1 ஸ்பூன்
மிளகுத்தூள்  -  அரை ஸ்பூன்
சீரகத்தூள்  -  1/4 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை  -  2 சிறு துண்டு
எண்ணெய்  -  அரை கப்
நெய்  -  அரை கப்
கொத்தமல்லி, புதினா  -  ஒரு கைப்பிடி
காலிஃபிளவர், கேரட், பீன்ஸ்,பட்டாணி  -  1/4 கிலோ


செய்முறை:
 
முதலில் பல்லாரி, தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கவும். அரிசி, பருப்பை கழுவி ஊற விடவும். தேங்காயுடன் கசகசாவை சேர்த்து மைய அரைக்கவும். அடிக்கனமான பாத்திரத்தில் வாசனை பொருட்களை போட்டு பொரிய விட்டு பின்பு பல்லாரியை போடவும். வெங்காயம் பொன்முறுவலானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், தக்காளியை போட்டு குழைய விடவும். பிறகு காய்கறிகள், புதினா கொத்தமல்லியை போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதில் அரிசி கலவையை கொட்டி லேசாக கிளறவும். இதில் நீரை சேர்த்து நன்கு கலக்கவும். 5 கப் நீர் போதுமானது. எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது மூடியை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அரிசி முழுவதுமாக வெந்தவுடன் தயிரைச் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும். சுவையான கிச்சடி சாதம் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்