SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரஞ்சு சாக்கோ கேக்

2019-02-27@ 14:19:03

தேவையானவை:

மைதா மாவு  - 2 கப்
பொடித்த சர்க்கரை  - ஒரு கப்
பேக்கிங் பவுடர்  - இரண்டரை டீஸ்பூன்
ஆளி விதை  - 2 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சுத் தோல் துருவல்  - ஒரு டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - கால் கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப்
ஆரஞ்சுச் சாறு - கால் கப்
எண்ணெய் - 1/3 கப்
உப்பு - கால் டீஸ்பூன்
ஆரஞ்சு எசென்ஸ் - அரை டீஸ்பூன்
செர்ரி (அ) உலர்திராட்சை - அரை கப்
சாக்கோ சிப்ஸ் - கால் கப்
வெண்ணெய் - சிறிதளவு

அலங்கரிக்க:

ஐசிங் சுகர் - முக்கால் கப், ஆரஞ்சுச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஓவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் வெண்ணெய் தடவவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஆளி விதை, சர்க்கரை சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய், தயிர், பால், ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மைதா கலவை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு செர்ரி (அ) உலர் திராட்சைத் துண்டுகள், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் மைதா கலவையை ஊற்றவும். இதை அவனுள் வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும். (டூத்பிக்கால் குத்திப் பார்த்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுக்கவும்). ஐசிங் சுகர், ஆரஞ்சுச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தச் சிரப்பை கேக்கின் மேல் தெளித்துப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்