SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேர்க்கடலை புட்டு

2019-02-27@ 14:13:42

தேவையானவை:

புட்டு மாவு - ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை -  கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய், காய்ந்த மிளகாய், உப்பு - தேவையான அளவு


செய்முறை:

வேர்க்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும்.  புட்டு மாவுடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, உதிர்த்த புட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் புரட்டவும். மேலே தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

குறிப்பு:

வேகவைத்த புட்டு மாவுடன்... வேகவைத்த வேர்க்கடலை, நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்தால்... இனிப்பு புட்டு ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்