SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொத்துக்கறி உருண்டை குழம்பு

2019-02-27@ 14:11:10

தேவையானவை:
    
கொத்துக்கறி    - 1/2 கிலோ
தேங்காய்    - 1 கப்
மல்லித்தழை, புதினா -  சிறிதளவு
முட்டை   - 1
மல்லித்தழை, புதினா   - சிறிதளவு
நெய்   - 2 ஸ்பூன்
கசகசா   - 1 ஸ்பூன்
பல்லாரி   - 1
மிளகாய்   - 6
வர கொத்தமல்லி  - 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம்  - 1 ஸ்பூன்
பட்டை    - 1 அங்குலம்
கிராம்பு   - 3
எலுமிச்சம்பழம் ஜூஸ்  - 1/2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு   - 6
ஏலக்காய்   - 2


செய்முறை:

முதலில் மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, பெருஞ்சீரகம், கசகசா, முந்திரிபருப்பு ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்து மசாலாவாக அரைக்கவும். குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கவும். வதக்கிய கறியை மிக்ஸியில் லேசாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். பின் அதே குக்கரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து நன்கு வதக்கவும். தொடர்ந்து மீதமுள்ள அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கும்போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இறக்கியவுடன் எலுமிச்சம்பழம் ஜூஸை ஊற்றவும்.  மணம் நிறைந்த கொத்துக்கறி உருண்டை குழம்பு ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்