SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூசணிக்காய் அல்வா

2019-02-14@ 17:59:03

தேவையான பொருட்கள்

பூசணிக்காய்  துருவல் - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் கலர் - தேவைக்கேற்ப,
நெய் - மூன்று குழிக்கரண்டி,
முந்திரி - பத்து, திராட்சை - பத்து.


செய்முறை :

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, அதே கடாயில் பூசணிக்காய்  துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக குழைய கிளறவும். பிறகு, அதில் நெய் சுற்றி ஊற்றி ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும். ஏலக்காய் தூள், மஞ்சள் கலர் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் கிளறி இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்