SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னாசி ஸ்வீட் பாயேஷ்

2019-02-07@ 17:51:51

என்னென்ன தேவை?

அன்னாசி பழத்துண்டுகள் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
பால் - 750 மி.லி. பாதாம்,
பிஸ்தா - தலா 7,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.


எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் பேனில் பாலைச் சேர்த்து, பாதி அளவிற்கு சுண்டும் வரை மிதமானச் சூட்டில் சூடு செய்யவும். வெது வெதுப்பான 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, சுண்டியப் பாலில் சேர்க்கவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூளைச் சேர்த்து கலக்கவும். தோல் சீவி நறுக்கிய அன்னாசிப் பழத்துண்டுகளை மிக்சியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

நான்ஸ்டிக் தவாவில் நெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவைச் சேர்த்து வதக்கி, அரைத்த அன்னாசி விழுதைச் சேர்த்து சிம்மில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். பாலின் சூடும், அன்னாசி விழுதின் சூடும் ஆறியதும் இரண்டையும் ஒன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: சூடானப் பாலில் அன்னாசி விழுதைச் சேர்த்தால், அன்னாசியிலுள்ள அமிலம் பாலைத் திரியச் செய்து விடும். ஆகவே பால் ஆறியதும் அன்னாசி விழுதைச் சேர்க்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்