SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகு சேமியா சீஸ் பால்ஸ்

2019-02-07@ 17:45:53

என்னென்ன தேவை?

வரகு சேமியா - 100 கிராம்,
மைதா மாவு, சோள மாவு - தலா 50 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
மசித்த உருளைக்கிழங்கு - 1,
எண்ணெய் - தேவைக்கு,
துருவிய சீஸ் - 1 கப்.


எப்படிச் செய்வது?

சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா, சோள மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வரகு சேமியாவை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். சீஸ் கலவை உருண்டையை மைதா, சோள மாவு கரைசலில் முக்கி, பின் வரகு சேமியா கலவையில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்