SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பு சீடை

2019-02-05@ 14:17:51

என்னென்ன தேவை :

பச்சரிசி - 2 ஆழாக்கு
வெல்லம்    - 2 ஆழாக்கு (பொடித்தது)
தேங்காய்    - 1 மூடி
பொட்டுக்கடலை - 1/4 ஆழாக்கு
ஏலக்காய் - 5


எப்படிச் செய்வது :

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும்.

பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக கிளறவும். இத்துடன் பொட்டுக்கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியை எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். மொறுமொறு இனிப்பு சீடை தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்