SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்குடி நண்டு குழம்பு

2019-02-04@ 17:34:11

என்னென்ன தேவை?

நண்டு - 3,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 3,
நசுக்கிய பூண்டு - 5,
கடலெண்ணெய் – 100 மிலி,
வெந்தயம் –- 1/2ஸ்பூன்,
சோம்பு  , மிளகாய்த்தூள் –- 2 ஸ்பூன்,
மல்லித்தூள் , மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
சோம்புத்தூள் – 1/2ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
புளி கரைசல் – 1 கப்,
தேங்காய்ப் பால் - 1 கப்,
நல்லெண்ணெய் -100 மிலி.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு வெந்தயம், சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் நண்டை சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து கிளறி புளி கரைசலை ஊற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதியில் இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்