SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொழுக்கட்டை சுண்டல்

2019-01-24@ 17:11:38

என்னென்ன தேவை?

ரெடிமேட் கொழுக்கட்டை மாவு அல்லது பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
நல்லெண்ணெய் - தேவைக்கு,
காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை,
கொத்தமல்லி - தேவைக்கு,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிறிது உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி மாவை சிறிது, சிறிதாக போட்டு கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும். சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து கொள்ளவும். கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெைய காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த கடலைப்பருப்பு, உப்பு, வெந்த கொழுக்கட்டைப் போட்டு பிரட்டி, தேவையானால் தேங்காய்த் துருவல், மல்லித் தழையை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்