SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் மஞ்சூரியன்

2019-01-08@ 15:52:41

என்னென்ன தேவை :

சிறிய இறால் - 1/2 கிலோ
சில்லி பிலேக்ஸ் - 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் - 2 கொத்து
குடமிளகாய் - 1
பூண்டு - 10 பல்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரெட்சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
டொமட்டோ சாஸ் - 3 ஸ்பூன்
பல்லாரி - 1
சர்க்கரை - 1 ஸ்பூன்


செய்முறை

இறாலை கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். குடமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டவும். பல்லாரி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கவும். வெங்காய தாளையும் நறுக்கவும். முதலில் இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். பொரித்த எண்ணெயில் பல்லாரியை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் நன்றாக வதக்கவும். இத்துடன் சில்லி பிலேக்ஸ், சிறிதளவு உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் குடமிளகாய், வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும். சுள் சுவையில் இறால் மஞ்சூரியன் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்