SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசாலா பணியாரம்

2018-12-20@ 17:31:40

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுந்தம்பருப்பு - 1½ கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 4,
நறுக்கிய கறிவேப்பிலை - 2 கொத்து,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். கடாயில் 2  டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி தேங்காய்த்துருவல் வதக்கி  இறக்கவும். ஆறியதும் மாவில் கொட்டி கலந்து கைகளால் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மல்லி சட்னி, தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்