SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொற்கிளி சமோசா

2018-11-26@ 17:57:04

என்னென்ன தேவை?

மைதா - 250 கிராம்,
வெண்ணெய்- 50 கிராம்,
வெள்ளை எள்- 2 சிட்டிகை,
உப்பு- தேவைக்கு,
கடலை எண்ணெய் - பொரித்தெடுக்க.

ஸ்டஃபிங் செய்ய..

துருவிய கேரட் - 250 கிராம்,
பால் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
முந்திரி, பாதாம், பிஸ்தா - அரை கப் (துருவியது),
வெண்ணெய் (அ) நெய் - 1 தேக்கரண்டி ,
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?
 
கேரட்டைக் கழுவி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கி கேரட் துருவலை வதக்கவும். பிறகு, பால் சேர்த்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்க்கவும். பச்சை வாசம் போக மிதமான தீயில் கிளறவும். தண்ணீர் முழுவதும் வற்றியதும் ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை சேர்த்துக் கிளறவும். மைதா மாவுடன் வெண்ணெயைச் சேர்த்து குறைவான அளவு தண்ணீர் கலந்து எள் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துகொள்ள வேண்டும். சப்பாத்தி போல மாவைத் தேய்த்து உள்ளங்ைகயில் வைத்து அதில் நடுவே கேரட் அல்வாவை வைத்துச் சுருக்கு பை போல கட்டவும். மாவின் ஓரத்தை சரியாக ஒட்டவில்லை என்றால் இனிப்பு எண்ணெயில் உதிர ஆரம்பிக்கும். கடாயில் எண்ணெய் சூடானதும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்