SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்காய் சாதம்

2018-11-21@ 14:27:56

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
துருவிய மாங்காய் - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி அல்லது வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கிளிமூக்கு மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.  பச்சரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பின்பு 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசறி ஆற விடவும். கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, மாங்காய்த்துருவல், தேங்காய்த்துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும். இத்துடன் சாதம், வேர்க்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சாதம் மஞ்சளாக வேண்டுமென்றால் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயை குழைய வதக்கக் கூடாது.

Tags:

Mango rice

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்