SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளநீர் பிரியாணி

2018-11-20@ 16:54:18

என்னென்ன தேவை :

கொங்கு இளநீர் - 5,
சீரக சம்பா - 1/2 கிலோ,
உப்பு - சிறிதளவு,
வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
வெங்காயம் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 10,
இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் - 100 கிராம்,
கேரட் - 50 கிராம்,
பீன்ஸ் 50 கிராம்,
பட்டாணி - 50 கிராம்,
உப்பு - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
ஏலக்காய், கிராம்பு - தலா 4,
பிரியாணி இலை - சிறிதளவு.


எப்படி செய்வது :

குக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி கேரட், பீன்ஸ், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும். இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் தம் போடணும். இளநீரின் வழுக்கையை நீக்கி அதன் கூட்டில் சாதத்தை நிரப்பி இட்லி பானையில் இருபது நிமிடங்கள் நீராவியில் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்