SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவிஸ் ஸ்ட்ராபெர்ரி ரோல்

2018-11-14@ 17:46:48

என்னென்ன தேவை?

பொடித்த மேரி பிஸ்கெட், உதிர்த்த கேக் - தலா 1/4 கப்,
பவுடர் சுகர், தண்ணீர், பால், ஸ்ட்ராபெர்ரி ஜாம் - தலா 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 4 டீஸ்பூன்,
பட்டர் பேப்பர் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பொடித்த பிஸ்கெட், உதிர்த்த கேக், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும். பவுடர் சுகரில் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி கேக் கலவையை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.ஸ்ட்ராபெர்ரி ஜாமுடன் 1 டீஸ்பூன் பிஸ்கெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய் கலந்து கேக் கலவையில் சமமாக பரப்பி, பேப்பருடன் நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து செட் செய்து, ஒரு இஞ்ச் அகல துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்