SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகத்திக்கீரை பிஸிபேளாபாத்

2018-10-08@ 15:56:06

என்னென்ன தேவை?

வெண் புழுங்கலரிசி - 1/4 கிலோ,
அகத்திக்கீரை - 1/4 கட்டு,
காய்ந்தமிளகாய் - 7,
கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
தனியா - 1/2 டீஸ்பூன்,
கடலை எண்ணெய் - 6 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
துவரம்பருப்பு - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து இறக்கி தேங்காய்த்துருவலை போட்டு கலந்து சூடு ஆறியதும் கரகரப்பாக அரைக்கவும். அரிசியை கழுவி குக்கரில் போட்டு அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், கீரை, உப்பு,  துவரம்பருப்பு, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 7 அல்லது 9 விசில் வைத்து நன்கு குழைவாக வேகவைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பிஸிபேளாபாத்தில் கொட்டி கலந்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறி இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்