SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருவிளங்காய் உருண்டை

2018-08-31@ 16:38:28

என்னென்ன தேவை?

புழுங்கலரிசி - 4 கப்,
பயத்தம்பருப்பு - 1 கப்,
கோதுமை - 1 கப்,
வெல்லம் - 2 கிலோ,
சுக்குபொடி - 2  டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்  பொடி - 2  டேபிள்ஸ்பூன்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரிசியை கழுவி வடிகட்டி வைக்கவும். வெறும் கடாயில் அரிசி, கோதுமை, பயத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் அனைத்தையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் வெல்லம், 1 டம்ளர் தண்ணீர் விட்டு பழப்பாகு பதத்திற்கு காய்ச்சி தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடியை சேர்த்துக் கிளறவும்.

மிதமான தணலில் வைத்து 2 கப் பொடியையும், பாகையும் சேர்த்துக் கலக்கி உருண்டையாகப் பிடிக்கவும். பொடியும் பாகும் தீரும் வரை இது மாதிரியே செய்யவும். ஒரே சமயத்தில் பொடியையும், பாகையும் ஒரு சேர சேர்க்க வேண்டாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்